குருணாகல் நீதவானுக்கு ஏற்பட்டுள்ள நிலை
Wednesday, 08 Jul 2020

குருணாகல் நீதவானுக்கு ஏற்பட்டுள்ள நிலை

12 July 2019 05:22 pm

மருத்துவர் சஹாப்டீன் சாபிக்கு எதிராக வழக்கு விசாரணை செய்யும் நீதவான் சம்பத் கரியவசத்தின் மனைவி குருணாகல் வைத்தியசாலையில் மருத்துவர் எனத் தெரியவருகின்றது.

இவ்வாறான ஓர் பின்னணியில் நீதவான் சம்பத்திடமிருந்து பக்கச்சார்பற்ற நிலைமையை எதிர்பார்ப்பது சற்றே கடினமானது என தெரிவிக்கப்படுகிறது.

பக்கச்சார்பான நிலைமைக்கும் நீதியின் பக்கத்திற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமையே இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டு பக்கங்களினதும் நியாயங்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதே மிகவும் பொருத்தமானதாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கின் முதல் நாள் விசாரணைகளின் போது நீதவானின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

தனது மனைவி கடமையாற்றும் மருத்துவமனையின் பணிப்பாளரை சாட்சியமளிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.