Dr. சாபிக் குற்றச்சாட்டு- CIDயின் அறிக்கை

Dr. சாபிக் குற்றச்சாட்டு- CIDயின் அறிக்கை

28 June 2019 12:49 pm

வைத்தியர் சாபிக் வழக்கு நேற்று (27) குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வைத்தியர் ஷாபியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சம்பந்தமான விடயங்கள் அடங்கிய 210 பக்க அறிக்கை ஒன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

தீவிரவாத  அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணியதாக வைத்தியர் சாபிக்கு  எதிராக முன்வைக்கப்பட்ட விடயம் பொய்யானது எனவும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடனோ அல்லது வேறு தீவிரவாத அமைப்புக்களுடனோ எவ்வித தொடர்புமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இதுவரை 500ற்கும்  அதிகமானவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 615 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அதில் 468 சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் என்றும், ஏனைய 147 முறைப்பாடுகளும் சத்திரசிகிச்சையின் பின்னர் வெவ்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் தாய்மார்களால் செய்யப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4000  தாய்மார்களுக்கு சத்திரசிகிச்சை செய்யும் போது சாதாரணமாக சத்திர சிகிச்சைக்கு செலவிடும் காலத்தை விட குறைந்த காலத்தை வைத்தியர் சாபிக் செலவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

KK