UNP ஜனாதிபதி வேட்பாளர்-கரு?தம்மிக்க?சஜித்?
Wednesday, 11 Dec 2019

UNP ஜனாதிபதி வேட்பாளர்-கரு?தம்மிக்க?சஜித்?

22 June 2019 11:27 am

கடந்த 19ம் திகதி நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் UNPயின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவா  அல்லது தம்மிக்க பெரேராவா என ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன நேரடியான பதில் ஏதும் அளிக்கவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என முடிவு செய்துள்ள போதும் ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு நேரம் வந்ததும் அது தொடர்பாக தெரிவிப்பதாக அவர் கூறினார்.

நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஜூலை 01ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்கவுள்ளதாக அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்த கருத்து தொடர்பாக கல்வி அமைச்சரிடம் வினவிய போது  "தத்தமது விருப்பத்துக்காக ஒருவரை நியமிக்க இயலாது, வேட்பாளர் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பது செயற்குழு" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

KK