Dr.சாபிக் வழக்கு விசாரணைக்கு

Dr.சாபிக் வழக்கு விசாரணைக்கு

20 June 2019 10:32 am

சர்ச்சைக்குறிய குருணாகல் வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெற்றுள்ள தகவல்கள் அடங்கிய ஓர் அறிக்கை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்  தினத்தன்று  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வைத்தியர் சாபிக் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

KK