பெருமளவு வெடிபொருட்கள் புதைத்து வைத்திருந்த நிலையில் இன்று மாலை மீட்கப்பட்டது
Wednesday, 08 Dec 2021

பெருமளவு வெடிபொருட்கள் புதைத்து வைத்திருந்த நிலையில் இன்று மாலை மீட்கப்பட்டது

24 October 2021 06:33 pm

வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் புதைத்து வைத்திருந்த நிலையில் இன்று மாலை மீட்கப்பட்டது. காணி உரிமையாளர் ஒருவர் தனது நிலத்தை சீர் செய்த சமயம் சில வெடிபொருட்கள் தென்பட்டுள்ளது. இதனால் நிலத்தின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

 

இவ்வாறு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிசார் விசேட அதிரடிப்படையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர். இதில் ஆர்.பி.ஜி வெடிகுண்டுகள் 12, எறிகணைகள் 20 ஆகியவற்றுடன் நூற்றுக் கணக்கான துப்பாக்கி ரவைகளும. மீட்கப்பட்டுள்ளது.