மன்னாரில் நாளை விவசாயிகள்  போராட்டம்
Saturday, 27 Nov 2021

மன்னாரில் நாளை விவசாயிகள்  போராட்டம்

24 October 2021 08:36 am

மன்னாரில் நாளை விவசாயிகள்  போராட்டம்-பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு. (24-10-2021)   மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் நாளை  திங்கட்கிழமை (25) காலை 10 மணிக்கு மாபெரும்  போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ள நிலையில்,அனைத்து விவசாயிகளும் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

 

குறித்த  போராட்டமானது மன்னார் - உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் முன்பாக இடம்பெறவுள்ளது. 'தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ளது. அரசின் திட்ட மிடாத நடவடிக்கை காரணமாக இந்த நாட்டில் பாரிய உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அரசு உடனடியாக விவசாயிகளுக்கு உரத்தை வழங்குமாறு கோரி நடைபெற உள்ள இந்த போராட்டத்துக்கு அனைத்து விவசாயிகளையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ. சார்ள்ஸ் நிர்மலநாதன்  தெரிவித்துள்ளார்.