நானோ நைட்ரஜன் திரவங்கள் இறக்குமதியில் மோசடி - சஜித்
Wednesday, 08 Dec 2021

நானோ நைட்ரஜன் திரவங்கள் இறக்குமதியில் மோசடி - சஜித்

24 October 2021 08:07 am

அரசாங்கம் அவசரமாக நானோ நைட்ரஜன் திரவங்களை இறக்குமதி செய்து கடுமையான மோசடிக்கு வழி வகுத்துள்ளதோடு தொடர்புடைய இறக்குமதி இராஜதந்திர அடிப்படையிலோ அல்லது முறையான கொள்முதல் செயல்முறையின் மூலமோ அல்லவென்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திடீரென்று காளான் போல உருவான ஒரு நிறுவனத்திற்கு இந்த நாட்டில் வரி செலுத்துவோர் மற்றும் அப்பாவி மக்களின் 29 கோடி ரூபா மோசடியாகப் பயன்படுத்தி நானோ திரவத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இந்த பாரிய மோசடி பற்றி உடனடியாக பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, இதன் பின்னணியில் உள்ள மோசடிக்காரர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த மக்களின் பணத்தோடு விளையாடும் விளையாட்டை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த நாட்டு மக்கள் அளித்த வாக்குகளின் மதிப்பை அரசாங்கத்தால் கடுமையான விதத்தில் மீறல்களைச் செய்துள்ளது என்றும்,தற்போது அரசாங்கத்தின் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் மக்களை ஏளனப்படுத்துகின்றவர்களாக மாறியுள்ள நிலைக்குட்பட்டுள்ளார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அரசியல் தூண்டுதலின் விளைவாக ஏற்பட்டது அல்ல என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மக்களை எங்கு போவார்கள் என்று தெரியாத நிலைக்கு தள்ளிய அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திஸ்ஸமஹாராம,பந்தகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற கொவி ஹதகெஸ்ம நிகழ்ச்சியின் மற்றுமொரு கட்டத்தில் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த உண்மைகளை வெளிப்படுத்தினார்.

இப்பிரதேசத்தில் பால் பண்ணையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் தென்னகோன் நிலமே மற்றும் பிரதேச மக்கள் பிரதிநிதிகள்,விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.