அசாத் சாலியின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு
Monday, 25 Oct 2021

அசாத் சாலியின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு

24 September 2021 04:29 pm

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் பிணை கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

 மேல்நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் இரண்டாம் பிரிவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பிணை வழங்க அரசதரப்பு சட்டத்தரணி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட நீதிமன்றில் பிணை மனு கோரிக்கையை முன் வைக்க உள்ளதாகவும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனு கோரிக்கையை மீள பெருவருவதாகவும் அசாத் சாலியின் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கேட்டுக்கொண்டார்.

அதன்படி பிணை வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி பிணை மனு கோரிக்கையை மீள பெறவும் மறுப்பு தெரிவித்தார்.