சமூக வலைத்தளங்களில் சர்ச்சை உருவாக்கியுள்ள மயான பெயர்பலகை!
Saturday, 27 Nov 2021

சமூக வலைத்தளங்களில் சர்ச்சை உருவாக்கியுள்ள மயான பெயர்பலகை!

20 September 2021 07:28 pm

வெலிகம பகுதியில் மயானம் ஒன்று  அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா பெயர் பலகைக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் உள்ளடக்கி உள்ளமை சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

சுமார் 70 மில்லியன் செலவில் இந்த மயானம் மற்றும் மரண சடங்கு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா பெயர் பலகையில் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட அதிதிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த பெயர் பலகை விடயம் சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை அதிகரித்துள்ளது.