ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை திகதி குறித்து சஜித் ஆரூடம்!
Saturday, 27 Nov 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை திகதி குறித்து சஜித் ஆரூடம்!

10 September 2021 03:25 pm

முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்.

"இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினம் செப்தெம்பர் 12 ஆகும். சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எங்கள் அன்புமிக்கவரும், பிரபல நடிகரும் மக்கள் சார்பு அரசியல்வாதியுமான ரஞ்ஜன் ராமநாயக்கவை அன்றைய தினம் சனாதிபதி மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வார் என எதிர்பார்க்கின்றேன்."