பதக்கம் வென்று வந்தவர்களுக்கு பாரிய வரவேற்பு - படங்கள்
Saturday, 27 Nov 2021

பதக்கம் வென்று வந்தவர்களுக்கு பாரிய வரவேற்பு - படங்கள்

8 September 2021 12:30 pm

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலன் கொடித்துவக்கு ஆகியோர், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் நேற்று மாலை 4.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் விளையாட்டு வீரர்களை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.