சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால் உடனே அழைக்கவும்
Saturday, 25 Sep 2021

சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால் உடனே அழைக்கவும்

28 July 2021 10:33 am

கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால் அது குறித்து உடன் அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 

அதன்படி, 0112433333 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்ய முடியும். 

சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் வீடுகளைத் தேடி பொலிஸார் விசேட நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர். 

அதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.