யார் இந்த கிளி மகாராஜா?
Saturday, 25 Sep 2021

யார் இந்த கிளி மகாராஜா?

26 July 2021 09:43 am

இலங்கையின் முதல்தர பணக்காரரும் கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவருமான R.ராஜமகேந்திரன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களான சக்தி, சிரச, MTV வலையமைப்புக்களும், இலங்கையின் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களான S-lon, Kevilton கம்பனிகள் உற்பட பல்வேறு கம்பனிகளின் உரிமையாளருமான கிளி-மகேந்திரன் அல்லது ராஜேந்திரம்-ராஜமகேந்திரன் என்று அழைக்கப்படும் R.ராஜமகேந்திரன் இலங்கையின் முதலாவது பணக்காரராக அடையாளப்படுத்தப்பட்டுமிருந்தார்.

இந்த வியாபார நிறுவனத்தின் வரலாறு 90 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வரலாறு 1930ஆம் ஆண்டுகளில் தொடங்குகின்றது. 1930ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் மூளாய் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மகாதேவன், கொக்குவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னாதம்பி ராஜந்திரம், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வேலைதேடி வேலை செய்து வந்த காலம்.

அப்போது இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முந்திய காலம் பிரிட்டிஷார் கொழும்பில் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். மகாதேவன் எல்.டி.சீமஸிலும், ராஜந்திரம் டாட்ஜ் & சீமரில் இரண்டு அமெரிக்க நிறுவனங்களிலும் விற்பனையில் முகவர்களாக வேலை செய்து வந்த காலம்.

இவ்வாறு ஒன்பது ஆண்டுகள் வேலை செய்து வந்த பின்பு, 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தம் காரணமாக நிறுவனத்தின் உரிமையாளர்கள் அமெரிக்காவுக்கு திரும்பி செல்ல முடிவு எடுத்ததால் நிறுவனத்தை அவர்கள் இந்த இரண்டு நபர்களும் தங்களிடமிருந்த முழுப் பணத்தையும் சேமிப்பையும் கொடுத்து இதனை வாங்கினார்கள்.

வாங்கி நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்ட சில ஞாபகம் நிறைந்த பொருட்களாக இருப்பது, அக்காலத்தில் மின் கலங்கலான எவரெடி பேட்டரிகள் கிட்டத்தட்ட 90% சந்தைப் பங்கைக் கொண்டு கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாது, தெர்மோஸ் பிளாஸ்க், செஸ்பரோ பாண்ட்ஸ், வைலர் வாட்ச்ஸ், குடெக்ஸ், ஷீஃபர் பேனாக்கள் மற்றும் பெக்டன் & டிக்கின்சன் சிரிஞ்ச், பார்க்கர் பேனாக்கள், குயின்க் மை, கொல்கேட் பாமோலிவ், யேல் என்று மக்களின் அத்தியாவசியத் தேவை பொருட்கள் பலவற்றை இலங்கையில் மூலைமுடுக்கெல்லாம் விநியோக சங்கிலி களை உருவாக்கி விற்பனை களை மிக வெற்றிகரமாக செய்தார்கள்.

1957ஆம் ஆண்டு நிறுவனத்தை ஸ்தாபித்த நண்பர்களில் ஒருவரான மகாதேவனின் மறைவுக்குப் மகாதேவன் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லாததால், ராஜந்திரம் இரு நிறுவனங்களின் ஒரே உரிமையாளரானார். 1966 ஆம் ஆண்டு ராஜேந்திரத்தின் மறைவுடன், நிறுவனத்தின் பொறுப்புகள் அடுத்த தலைமுறையினருக்கு - அதாவது அவருடைய பிள்ளைகள் ராஜந்திரம் மகாராஜா மற்றும் ராஜந்திரம் ராஜமஹேந்திரன் ஆகியோருக்கு சென்றது.

இவ்வளவு காலமும் இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டது நிறுவனம் இலங்கை அரசின் பொருளாதார கொள்கையை மாற்றும் அடைந்ததால் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் காணப்பட்டது. நிறுவனம் ஏற்றுமதியில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியது.

இந்தக் காலப்பகுதியில் இருந்து 1983ஆம் ஆண்டு இனக் கலவரம் நடைபெறும் வரை நிறுவனம் அமோக வளர்ச்சி பெற்றது.

நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட எஸ் லோன் குழாய்கள் சர்க்கரை, பிரிமா கோதுமை மாவு உற்பத்தி ஏன் மகாவலி திட்ட கட்டுமான பணிகள் அங்கர் பால்மா இறக்குமதி 1978ஆம் ஆண்டு களில் கணினி இறக்குமதி ரப்பர் உற்பத்தி என பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தது.

1983 இல் நடந்த உள்நாட்டு கலவரத்தின்போது, ​​ஏழு உற்பத்தி ஆலைகள் மற்றும் அதன் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல சொத்துக்களை காடையர்கள் எரித்து அழித்தது பாரிய சேதத்தை ஏற்படுத்தினர்.

அதன் பின்பு படிப்படியாக விமான பயண சேவைகள் என்று பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்தாலும் முக்கியமாக குறிப்பிடக் கூடிய ஒரு படியும் 1993ஆம் ஆண்டு, டெலிகாம் மலேசியா பெர்ஹாட் மற்றும் டி.எம்.ஓ.எல் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியானது இலங்கையில் டயலொக் நடவடிக்கைகளைத் தொடங்கியது .

டயலொக் 1993 ஆம் ஆண்டில் எம்டிஎன் நெட்வொர்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனமாக டெலிகாம் மலேசியா பெர்ஹாட் (டிஎம்) மூலம் 90% மற்றும் 10% மூலதன மகாராஜா முதலீட்டிற்கு உள்ளூர் ஊக்குவிப்பாளர்களாக இணைக்கப்பட்டது.

மற்றும் ஜி.எஸ்.எம் கைத் தொலைபேசி சேவையை முதன்முதலில் தென்னாசியாவில் ஏன் அமெரிக்காவுக்கு முன்பாகவே தொழில்நுட்பத்தை பிராந்தியத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்த நிறுவனம் இலங்கையில் மிகப்பெரிய மொபைல் ஆபரேட்டராக மாறியது, பின்பு நிறுவனம் அதன் பத்துவித பங்குகள் ,மலேசியன் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு தற்போது டயலாக் என்ற பெயரில் இயங்கி வருகின்றது.

வயோதிபம் உடல்நிலை காரணமாக ஜனவரி 2001 இல், குழுவின் இணை நிர்வாக இயக்குநரான ராஜந்திரம் மகாராஜா ஓய்வு பெற, ராஜந்திரம் ராஜமஹேந்திரன் நிறுவன தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்த நிறுவனம் இலங்கையில் பிரபல தொலைக்காட்சியின் நிறுவனமான சிரச சக்தி டிவி போன்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை பங்குதாரரும், குழுவின் நிர்வாக இயக்குநருமான சஷி ராஜமஹேந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

முழு நிறுவனமும் இவருடைய சொத்தல்ல, சின்னாதம்பி ராஜந்திராமின் மகன் ராஜந்திரம் ராஜமஹேந்திரன் ஆர். ராஜமஹேந்திரன் தி கேபிடல் மகாராஜா ஆர்கனைசேஷன் லிமிடெட் நிறுவனத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பங்குகளை மட்டுமே நேரடியாக வைத்திருந்தாலும், மறைந்த ராஜமஹேந்திரன் அவரது மகன் சசிதரன் ராஜமஹேந்திரனும் நிறுவனத்தின் உரிமையை முதன்மையாக கேபிடல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

மறைந்த ஆர்.ராஜமஹேந்திரன் 79.95 சதவீத நேரடி பங்குகளையும், சஷிதரன் ராஜமஹேந்திரன் மூலதன ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தில் 20.05 சதவீத நேரடி பங்குகளையும் வைத்திருக்கிறார்கள்.

கேபிடல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் தி கேபிடல் மகாராஜா ஆர்கனைசேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 1.10 சதவீத நேரடி பங்குகளைக் கொண்டுள்ளது.

குடும்பத்தின் பல உறுப்பினர்களும் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுகிறார்கள். ராஜந்திரம் ராஜமஹேந்திரனின் மனைவி தற்போது இந்த அமைப்பின் கீழ் உள்ள Rumors salon நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார். ராஜமஹேந்திரனின் மகள் அஞ்சலி ராஜமஹேந்திரன் இந்த அமைப்பில் குழு இயக்குநராக உள்ளார்.

ராஜந்திரம் மகாராஜா மற்றும் பத்ம மகாராஜாவின் மகனான பிரதீப் மகாராஜாவும் இந்த அமைப்பில் குழு இயக்குநராக உள்ளார்.

இனப்பிரச்சினைகளுக்கு ஆண்டாண்டு காலமாக முகங்கொடுத்து வரும் இலங்கை தமிழர்கள் இலங்கையில் தொடர்ச்சியாக தமது முயற்சிகளை பல்வேறுபட்ட தடைகளையும் தாண்டி முன்னெடுத்து வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

தெற்காசியாவில் வியாபாரம் சிறப்பாக நடைபெற அரசியல் அனுசரணை என்பது தவிர்க்கமுடியாத ஒரு காரணியாக மாறிவிட்டது இந்த பின்புலத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் 100 ஆண்டு விழாவை நோக்கி பயணத்தை மேற்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் வெற்றி பெற பல தடைகளைத் தாண்ட வேண்டி வரும் என நம்பப்படுகின்றது.