எரிபொருள் விலை குறித்து அமைச்சர் உதய கம்மன்பில விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - வீடியோ
Saturday, 25 Sep 2021

எரிபொருள் விலை குறித்து அமைச்சர் உதய கம்மன்பில விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - வீடியோ

17 July 2021 09:30 pm

எரிபொருள் விலையை குறைக்கும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

கடந்த ஜூலை 11ம் திகதிக்குப் பின் இன்றுவரை உலக சந்தையில் எரிபொருள் விலை 10% அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

உலக அதனால் இலங்கையிலும் எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டும் எனவும் ஆனால் தான் அவ்வாறு செய்யாது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் விலை அதிகரிப்பு செய்யாது இருப்பதாகவும் கம்மன்பில கூறியுள்ளார். 

உலக சந்தையில் விலை ஏற்றத்தின்படி பார்த்தால் ஒரு லீட்டர் பெற்றோல் 179 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் ஆனால் 157 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுவதாகவும் டீசல் விலை 134 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் ஆனால் 111 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

மேலும் எரிபொருள் மக்களுக்கு இலவசமாக வழங்க கிடைத்தால் அதில் மகிழ்ச்சி அடையும் முதல் நபர் தான் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.