தரமற்ற தேயிலை தூள் உற்பத்தியால் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சிலோன் டீ விலை வீழ்ச்சி
Saturday, 25 Sep 2021

தரமற்ற தேயிலை தூள் உற்பத்தியால் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சிலோன் டீ விலை வீழ்ச்சி

13 July 2021 11:00 pm

தரமற்ற தேயிலை உற்பத்தி காரணமாக இலங்கையின் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கிலோவின் விலை தொடர்ந்து மூன்றாவது மாதம் ஆக குறைந்துள்ளது அத்துடன் ஜூலை மாதத்தில் மேலும் ஏற்றுமதி தேயிலை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் 75% தேயிலை உற்பத்தி செய்யும் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு தேவையான ரசாயன மருந்து மற்றும் உர வகைகள் தட்டுப்பாடு காரணமாக தரமற்ற தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது ஏற்றுமதி தேவைக்காக தயாரிக்கப்படும் தேயிலைத்தூள் தரமற்ற தேயிலை கொழுந்துகளை தயாரிக்க முடியாது என சிறு தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தரமான ஏற்றுமதிக்கு உகந்த தேயிலைத் தூளை தயாரிக்க அரசாங்கம் தடுத்து வைத்துள்ள இரசாயன உரம் மற்றும் மருந்துகளை சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு வினியோகிக்க வேண்டும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் நிலை உற்பத்திக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதோடு உர இறக்குமதி தடை குறித்து அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இரசாயன மருந்து மற்றும் உரங்கள் இன்று தேவையில்லை உற்பத்தி பெரிதும் பாதிப்படைந்து உள்ளதாக அவர் கூறியுள்ளார் மருந்து உரம் இன்றி தேயிலை செடிகளுக்கு பிலைட் என்ற நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு காரணம் இரசாயன உர பாவனை இல்லாமை என்பது கண்டறியப்பட்டுள்ளது இதனால் தேயிலை செடிகள் முழுமையாக அழிந்து போக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தோட்ட கம்பனிகள் வசம் இரசாயன உரம் மற்றும் மருந்து விடுப்பில் இருக்கும் நிலையில் சிறு தோட்ட உரிமையாளர்களிடம் அவ்வாறு இல்லை ஆனால் பெருந்தோட்ட கம்பெனிகளுக்கும் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கும் விற்பனை சந்தை ஒன்றாகும் இந்நிலையில் சிறு தோட்ட உரிமையாளர்களிடம் இருந்து தரமற்ற தேயிலை தூள் சந்தை கூறுவதால் அனைத்து வகையான தேயிலைத்தூள் விலை சந்தையில் குறைவடைந்து வருவதாக ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.