முன்கூட்டியே இலங்கையில் தயாராகி வரும் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை நிலையம் - படங்கள் இணைப்பு
Wednesday, 16 Jun 2021

முன்கூட்டியே இலங்கையில் தயாராகி வரும் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை நிலையம் - படங்கள் இணைப்பு

9 May 2021 04:58 pm

சீதுவையில் உள்ள ஒரு தனியார் ஆடை தொழிற்சாலையின் வளாகத்தில் இலங்கையின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

அனைத்து சுகாதார வசதிகளுடன் கூடிய இலங்கையின் அதிநவீன கொரோனா சிகிச்சை மையமாக உருவாகி வரும் இந்த மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்த சிகிச்சை மையம் அதிநவீன சுகாதார வசதிகளுடன் கூடியது மற்றும் பிற மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்.

இலங்கை இராணுவத்தின் முழுமையான மனித வலு மூலம் இந்த சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இடைவிடாத கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

நேற்று (8) இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை ராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவர் கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். சிகிச்சை மையத்தின் செயல்பாட்டை விரைவுபடுத்த இராணுவ தளபதி அறிவுறுத்தினார்.

ஊடகங்களுடன் பேசிய ராணுவத் தளபதி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய கட்டிடங்களை கையகப்படுத்தி எதிர்காலத்தில் மருத்துவமனைகளாக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.