கொரோனா ஒழிப்பு மீண்டும் சுகாதார அதிகாரிகள் வசம்
Wednesday, 16 Jun 2021

கொரோனா ஒழிப்பு மீண்டும் சுகாதார அதிகாரிகள் வசம்

9 May 2021 04:04 pm

 

நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து மாகாணங்களும் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான வசதிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதுவரையில் நாடளாவிய ரீதியில் 105 கொரோனா தடுப்பு நிலையங்களில் 19,000 இற்கு அதிகமான கட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.