பன்னிப்பிட்டிய பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா
Friday, 07 May 2021

பன்னிப்பிட்டிய பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா

19 April 2021 06:43 pm

பன்னிப்பிடிய பிரதேசத்தின் பாடசாலை ஒன்றில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 06 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் பாலர் பிரிவில் பயிலும் 04 மாணவர்களுக்கும் தரம் 08ல் பயிலும் மாணவர்கள் இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் பெரும்பாலான பாடசாலைகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை மட்டுமே கொண்டே செயற்பட்டன.

KK