ஜூன் மாகாண சபை தேர்தல், அடுத்த வருடம் உள்ளூராட்சி தேர்தல்
Tuesday, 20 Apr 2021

ஜூன் மாகாண சபை தேர்தல், அடுத்த வருடம் உள்ளூராட்சி தேர்தல்

8 March 2021 09:42 am

எதிர்வரும் ஜுன் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அப்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. தொடர்ந்து மாகாண சபை தேர்தலை பிற்போடுவது உகந்ததல்ல என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அத்துடன் உள்ளூராட்சி தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 340 சபைகளில் 200ற்கும் மேற்பட்ட சபைகளின் ஆட்சியை  பொதுஜன பெரமுன பிடித்தது. 

அதேபோன்று இம்முறையும் வெற்றி பெறாலாம் என்ற எதிர்பார்ப்பில் ஆளும் கட்சி உள்ளது.  

BR