ட்ரெண்டிங் வீடியோ - ஆணுறுப்பை வெட்டிய நபர்
Tuesday, 20 Apr 2021

ட்ரெண்டிங் வீடியோ - ஆணுறுப்பை வெட்டிய நபர்

4 March 2021 08:50 pm

சமூக வலைத்தளங்களின் தாக்கம் காரணமாக அனைவருக்குமே ட்ரெண்ட் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஊறிவிட்டது என்றே சொல்லலாம். இதற்காக பலவழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். இதற்காக சமூக ஊடங்களை தவறான முறையிலும் பயன்படுத்தி பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள்.

இந்த நிலையில் யூட்யூபில் வீடியோ வைரலாக வேண்டுமென்பதற்காக ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டை  சேர்ந்த ரேப் கலைஞரான ஆரோன் பெல்ட்ரன் தனது  யூட்யூப் சேனலில் வைரலாகும் வகையில் வித்தியாசமான சேலஞ்ச் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

இவரது ஆணுறுப்பை வெட்டி அந்த வீடியோவை பதிவேற்றலாம் எனவும், வீடியோ குறிப்பிட்ட அளவு வியூஸ் பெற்ற பிறகு அதற்கு ஏற்ப 200 யூரோ முதல் 2,500 யூரோ வரை பணம் வழங்குவதாகவும் அவரது நண்பர் சவால் விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, தனது ஆணுறுப்பை வெட்ட சம்மதம் தெரிவித்துள்ளார் ஆரோன் பெல்ட்ரன். இதுமட்டுமல்லாமல், வீடியோ வைரலாகிவிட்டால் அதன் மூலம் நிறைய பணம் ஈட்டலாம் எனவும் திட்டமிட்டுள்ளார்.

திட்டமிட்டதை போலவே வீடியோவும் வெளியாகியுள்ளது. ஆனால், இதன் காரணமாக அவருக்கு பல வழக்குகளையும் சந்திக்க நேர்ந்ததுள்ளது . 

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபரிடம் அனுமதி பெற்ற பிறகே ஆணுறுப்பு வெட்டப்பட்டதாக வழக்கின் போது வாதிடப்பட்டுள்ளது. எனினும், ஆரோனின் ஆணுறுப்பு மீண்டும் அவரது உடலில் பொருத்தப்பட்டுவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

KK