பெண்களுக்காக விசேட பாராளுமன்ற செயற்குழு - சபாநாயகரிடம் வேண்டுகோள்
Tuesday, 20 Apr 2021

பெண்களுக்காக விசேட பாராளுமன்ற செயற்குழு - சபாநாயகரிடம் வேண்டுகோள்

4 March 2021 05:34 pm

பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் பெண்கள் உரிமை மீறல்கள் குறித்து ஆராயவும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த தேவையான பரிந்துரைகளை வழங்கவும் விசேட பாராளுமன்ற செயற்குழுவை நியமிக்குமாறு கோரி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும்  கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவை இலக்கம் 03 கோட்பாடு புத்தகத்திற்கு இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆண்பெண் சமத்துவம் மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், இலங்கையினுள் அனைத்து பெண்கள் மற்றும்  சிறுமிகளுக்கு அதிகாரம் இருப்பதை உறுதி செய்து, பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண குறித்த குழு முன்மொழிந்துள்ளது.

வேலைவாய்ப்பு, பதவி உயர்வு வாய்ப்புகள் மற்றும் பணியிட வன்முறை உள்ளிட்ட பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் எதிரான பெண்களின் குறைகளை விசாரித்தல், அனைத்து துறைகளுக்கும் மற்றும் அனைத்து மட்டங்களுக்கும் போதுமான உள் வளங்களை ஒதுக்குதல் மற்றும் இலங்கையில் பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துதல். முன்னேற்றத்திற்கான அணுகுமுறையை மதிப்பாய்வு செய்யவும் மற்றும் அதற்காக முன்னியையாகுதல் உள்ளிட்ட 10 முன்மொழிவுகள் செயற்குழுவினால் மேற்கொள்ளப்படவேண்டும் என பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

KK