மக்கள் வசிக்காத பகுதியிலேயே நல்லடக்கம்
Tuesday, 20 Apr 2021

மக்கள் வசிக்காத பகுதியிலேயே நல்லடக்கம்

4 March 2021 01:47 pm

கொரோனா தொற்றுக்குள்ளாகி இறக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் அதற்கு எதிர்ப்பு எதிர்வித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த உடல்களை அடக்கம் செய்வதற்கு ஒவ்வொரு மாகாணங்களில் உரிய இடங்கள் அடையாளம் காணப்படும் வரை தற்காலிகமாகவே இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த சடலங்களை இரணைதீவில் மக்கள் வசிக்காத பகுதியில் அடக்கம் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

KK