இராணுவ அதிகாரியை நியமித்தும் வெற்றியடையவில்லை. எதிர்காலத்தில் கடுமையான தீர்மானம் எடுக்க நேரிடும் - ஜனாதிபதி
Monday, 08 Mar 2021

இராணுவ அதிகாரியை நியமித்தும் வெற்றியடையவில்லை. எதிர்காலத்தில் கடுமையான தீர்மானம் எடுக்க நேரிடும் - ஜனாதிபதி

24 January 2021 11:25 am

இலங்கை சுங்கத்தில் ஊழலை இல்லாதொழிப்பதற்காக தான் அதன் பணிப்பாளர் ஜெனரல் பதவிக்கு இராணுவ அதிகாரியை நியமித்த போதிலும் அது வெற்றியடையவில்லை எனவும் எதிர்காலத்தில் விரைவாக இதை விட கடுமையான முடிவுகளை எடுக்க தனக்கு நேரிடும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (23) களுத்துறை வளல்லாவிட்ட, யட்டபாத்த கிராமத்தில் இடம்பெற்ற 'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்ச்சித் திட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

"விசேடமாக என்னை நியமித்த போது, ​​இந்த நாட்டில் ஊழல் மிகப்பெரிய விஷயமாக இருந்தது. இப்போது நாம் எடுத்துக்கொள்வோம், அதிகூடிய குற்றச்சாட்டுக்கள் இருக்கும் இடம் சுங்கம். அதில் பெரும்பான்மையானவை  உண்மை. இராணுவ அதிகாரியை நான் நியமித்ததேன் பணிப்பாளர் ஜெனரலாக, இருப்பினும் அது வெற்றிகரமாக எனக்கு போதுமானதாக இல்லை. எனவே நான் விரைவில் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். அனைத்து சுங்க அதிகாரிகளையும் வெளியேற்றி சரி இதை ஒழுங்கமைக்க நான் வழி செய்வேன்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

KK