ஐக்கிய மக்கள் சக்தியில் புத்திஜீவிகள் சபை அங்குரார்ப்பணம்!
Monday, 08 Mar 2021

ஐக்கிய மக்கள் சக்தியில் புத்திஜீவிகள் சபை அங்குரார்ப்பணம்!

24 January 2021 11:01 am

தொழில் புலமையாளர்கள், கல்வியாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜிவிகள் சபை அதன் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. 

மக்கள் நலன்சார் கல்வியலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் அடங்குவர். 

கல்விமான்கள், புத்திஜீவிகள், நிபுணர்களை தேர்தல் காலத்தில் மாத்திரம் ஒன்றுசேர்த்து வாக்குகளை பெற்றுக் கொண்டு பின்னர் அவர்களை கைவிடும் கலாசாரம் இதுவரை இருந்து வந்துள்ளதாகவும் ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் தாம் ஒருபோதும் புத்திஜீவிகளை சந்தர்ப்பவாதத்தற்கு பயன்படுத்தப் போவதில்லை எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

எதிர்கட்சியில் இருக்கும் போது புத்திஜீவிகள் கல்வியலாளர்களின் ஒத்துழைப்பை பெறுவது போலவே ஆட்சி அமைத்த பின்னரும் அவ்வாறே செயற்பட உள்ளதாகவும் அவர் கூறினார். 

http://youtu.be/xnf7c89j1FQ

BR