2021ம் ஆண்டிற்கான உயர்தர வகுப்புக்கள் - கல்வி அமைச்சரின் தீர்மானம்
Monday, 08 Mar 2021

2021ம் ஆண்டிற்கான உயர்தர வகுப்புக்கள் - கல்வி அமைச்சரின் தீர்மானம்

24 January 2021 08:53 am

2020ம் ஆண்டிற்கான  உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதி அல்லது ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2021ம் ஆண்டிற்கான உயர்தர வகுப்புக்களை எதிர்வரும் ஜூலை மாத்ததில் ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த சாதாரண தரப் பரீட்சை கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும், மாணவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பரீட்சைப் பெறுபேறுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

KK