தப்பி சென்ற கொரோனா நோயாளர்
Monday, 08 Mar 2021

தப்பி சென்ற கொரோனா நோயாளர்

20 January 2021 12:43 pm

வாழைச்சேனை புனானை சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து நேற்றிரவு (19) 7.30 மணியளவில் தப்பிச் சென்ற கொரோனா நோயாளரை இன்று (20) எஹலியகொடை - பெல்பிடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

43 வயதான குறித்த நோயாளர் கொலன்னாவ – மீதொட்ட பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றியுள்ள நிலையில் கடந்த 13 ஆம் திகதி PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து கடந்த 17 ஆம் திகதி, கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அவர் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த நோயாளர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. 

இந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு (19) 7.30 மணியளவில் வாழைச்சேனை புனானை சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து தப்பி சென்றுள்ளார்.

KK