உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்றையதினத்துடன் (19) நிறைவடைந்துள்ள.
இதற்கமைய நேற்றைய தினம் (19) சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்த உமர் மொஹமட் எனும் நபர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியிருந்த நிலையில் தடுப்பு காவலிள் வைக்கப்பட்டுள்ள சாட்சி விசாரணைகளுக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றிய ஷானி அபேசேகர நேற்றைய தினம் சாட்சி வழங்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதற்கு சமூகமளித்திருக்கவில்லை.
கடந்த நாட்களில் அவரது உடல்நிலை உட்பட பல்வேறு காரணிகளால் தனது சட்டத்தரணிகளை சந்திக்க இயலாதமையினால் நேற்றையதினம் சாட்சியம் வழங்க ஆணைக்குழுவிற்கு வருகை தர முடியாது என ஷானி அபேசேகரவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதற்கமைய அவரிடம் எதிர்வரும் நாட்களில் சாட்சியம் பெறப்படுமா ? இல்லையா? என்பது குறித்து ஆணைக்குழு அறிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது தாக்குதல் இடம்பெற்ற 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்தின் கீழ் ஆகும்.
இதேவேளை ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
KK
2021-03-08 09:48:00
2021-03-08 09:42:00
2021-03-08 09:36:00
2021-03-08 09:28:00
2021-03-07 23:44:00