சுற்றுலா பயணிகளுக்கு அநாவசிய கட்டுப்பாடு விதிக்கக் கூடாது - உதயங்க வீரதுங்க
Monday, 08 Mar 2021

சுற்றுலா பயணிகளுக்கு அநாவசிய கட்டுப்பாடு விதிக்கக் கூடாது - உதயங்க வீரதுங்க

20 January 2021 10:02 am

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்கு அநாவசிய கட்டுப்பாடுகளை சட்டமாக திணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கூடாதென யுக்ரேன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்துள்ள உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். 

தனது முகநூலில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர், யுக்ரேன் பிரஜைகளுக்கு அவர்களது நாட்டில் ஒரு தடவை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கையில் அவர்களுக்கு 3 தடவைகள் பிசிஆர் பரிசோதனை செய்ய சுற்றுலா சபை தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனால் யுக்ரேனில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் மத்தள விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் சுற்றுலா பயணிகள் எவரும் வரவில்லை என்றும் உதயங்க வீரதுங்க கூறினார்.  

BR