மேலும் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் தனிமைப்படுத்தலில்
Saturday, 27 Feb 2021

மேலும் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் தனிமைப்படுத்தலில்

20 January 2021 09:29 am

இராஜாங்க அமைச்சர்களான டி.வி.சானக்க மற்றும் தாரக்க பாலசூரிய ஆகியோர் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவின் நெருங்கிய தொடர்பாளராக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

அவருக்கு இன்றைய தினம் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

மேலும் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவின் சாரதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார். 

BR