மேலும் 13 பேருக்கு கொரோனா
Friday, 23 Oct 2020

மேலும் 13 பேருக்கு கொரோனா

22 September 2020 10:52 pm

இன்றையதினம் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குவைத்த்தில் இருந்து வருகை தந்த 7 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த இருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கும், இந்தியாவில் இருந்து வந்த இந்திய நாட்டவர் ஒருவருக்கும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட கைதி ஒருவருக்குமே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,312 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,108 ஆக அதிகரித்துள்ளது.

KK