கண்டி - 08 குடும்பங்கள் வெளியேற்றம்
Friday, 23 Oct 2020

கண்டி - 08 குடும்பங்கள் வெளியேற்றம்

22 September 2020 03:22 pm

கண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மூன்று வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன, 21 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நிலவும் ஆபத்தான சூழ்நிலை காரணமாக பாதுகாப்பற்ற இடங்களில் வசித்து வந்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பூவெலிகட சங்கமித்தா மாவத்தையில் இடிந்து விழுந்த கட்டிடம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடிபாடுகளை அகற்ற பேரிடர் மேலாண்மை பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கண்டி நகர எல்லைக்குபட்ட பகுதியில் ஆபத்து ஏற்படும் என சந்தேகிக்கப்படும் கட்டடங்களை ஆய்வு செய்வதற்கு 10 பேர் அடங்கிய குழுவை நியமிப்பதற்கு மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்.

KK