இனி கிரிக்கெட் திருவிழா! ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி
Wednesday, 23 Sep 2020

இனி கிரிக்கெட் திருவிழா! ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி

10 August 2020 11:07 pm

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த இந்திய மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. வெளிநாடுகளில் கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகங்களின் அனுமதி தேவை. இதில் விளையாட்டுத் துறை அமைச்சகத்திடமிருந்து ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. 

இந்த நிலையில், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

vk