ரணில் விலகுவது உறுதி - புதிய தலைமைக்கு பரிந்துரைப்புகள் நான்கு
Wednesday, 23 Sep 2020

ரணில் விலகுவது உறுதி - புதிய தலைமைக்கு பரிந்துரைப்புகள் நான்கு

10 August 2020 08:26 pm

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க கட்சிக்கு அறிவித்துள்ளார். UNP முன்னாள் பாராளுமன்ற குழுவின் மற்றும் அதிகாரிகள் குழுவின் உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் UNP தலைவர் தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

புதிய தலைமைத்துவத்திற்காக இதுவரை 04 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக UNP பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், தெரிவித்துள்ளார். UNP பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், UNP துணைத்தலைவர் ரவி கருணாநாயக்க, தயா கமகே மற்றும் வஜிர அபேவர்த்தன ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

நாளை மறுதினம் (12) ஐதேக தலைவருடன் நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலில் புதிய தலைவர் யார் என்பது தொடர்பாக இறுதி தீர்மானத்திற்கு வருவதாகவும், அதன் பின்னர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய தலைமை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும் என்று பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக இன்றைய கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள போதும் அது தொடர்பாக இறுதி தீர்மானத்திற்கு எட்டப்படவில்லை.

KK