தபால் மூல வாக்களிப்பின் முதல் கட்டம் இன்று
Tuesday, 11 Aug 2020

தபால் மூல வாக்களிப்பின் முதல் கட்டம் இன்று

13 July 2020 11:47 am

2020ம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது கட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய இன்று (13) சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்டோர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக அனுராதபுரம் ராஜாங்கனை பகுதிக்கான சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் இன்றையதினம் வாக்களிக்க இயலாது. அவர்களுக்கான வாக்களிப்பு வசதி பின்னர் ஒழுங்குசெய்து தரப்படும்.

இதேவேளை14 மற்றும் 15ம் திகதிகளில் அரச பணியாளர்களுக்கும், 16  மற்றும் 17ஆம் திகதிகளில் பொலிஸார் மற்றும் முப்படையினரும் தபால் மூலம் வாக்களிக்க முடியும். இந்த திகதிகளில் வாக்களிக்க தவறும் வாக்காளர்கள் 20ஆம், 21ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும்.

KK