மேலும் 104 பேருக்கு கொரோனா
Saturday, 15 Aug 2020

மேலும் 104 பேருக்கு கொரோனா

12 July 2020 10:45 pm

இன்றையதினம் (12) இதுவரை 101 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நோயாளர்களுக்கு இடையில் ஈரானில் இருந்து வருகை தந்த இருவர், பெலாரஸ் நாட்டில் இருந்து வந்த 05 பேர் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

இன்றையதினம் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து சேனபுர புனர்வாழ்வு மத்தியநிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களுடன் நெருங்கிய 14 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 04 பேர் ராஜாங்கனை பகுதியில் இருந்தும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் பங்களாதேஷில் இருந்து வந்த இருவருக்கும் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதற்கமைய இலங்கையில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2612 ஆக அதிகரித்துள்ளது.

KK