ராஜாங்கனை பகுதியில் அதிகரிக்கும் கொரோனா
Tuesday, 11 Aug 2020

ராஜாங்கனை பகுதியில் அதிகரிக்கும் கொரோனா

12 July 2020 02:46 pm

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக பணியாற்றிய இராணுவ அதிகாரிக்கும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்றைய தினம் உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து அவரது மனைவி மற்றும் தாய்  உள்ளிட்டோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்  அவரது மனைவி ஆசிரியராக கடமையாற்றுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 300 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்றையதினம் அந்த பகுதியை சேர்ந்த 04 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2515 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இன்றையதினம் மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதற்கமைய இதுவரை 1981 பேர் குணமடைந்துள்ளனர்.

ராஜாங்கனையில் மூவருக்கு கொரோனா !

KK