ராஜாங்கனையில் மூவருக்கு கொரோனா !
Monday, 10 Aug 2020

ராஜாங்கனையில் மூவருக்கு கொரோனா !

11 July 2020 06:53 pm

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசனை நடவடிக்கைகளுக்காக வருகை தந்த இராணுவ அதிகாரிக்கும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்றைய தினம் (10) கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த இராணுவ அதிகாரியின் பிள்ளைகளின் வயது 11 மற்றும் ஒன்றரை வயது என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை 01ம் திகதி இந்த இராணுவ அதிகாரி ஆலோசனை முகாமொன்றை நடத்துவதற்காக சென்றுள்ளதுடன், அதன் மறுநாள் அனுராதபுரத்திற்கு வந்துள்ளார். இருப்பினும் குறித்த முகாமிற்கு அவர் செல்லவில்லை என குறிப்பிடப்படுகிறது.

அந்த அதிகாரி ஒரு குடும்பத்தின் நெருங்கிய ஒருவரின்  இறுதி சடங்கில் கலந்துக்கொண்டுள்ளதாக  கூறப்படுகிறது.

இந்த நபர் ராஜாங்கனையில் யாய 05 பகுதியில் வசிப்பதுடன், குறித்த மரண வீடு யாய 03 பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

இதற்கு மேலதிகமாக, அவரது மூத்த பிள்ளை கடந்த ஜூலை 06 மற்றும் 07ம் திகதிகளில் இராஜாங்கனையில் டெக் 01 பிரதேசத்தின் பாடசாலையின் வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகுப்புக்களில் 70 குழந்தைகள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், எனவே கடுமையான ஆபத்து எதுவும் இல்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த 70 சிறுவர்கள் அடங்களாக 300 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

KK