அபாயம் அதிகம் ஒரு நாளைக்கு 5000 PCR செய்யவேண்டும் - GMOA
Saturday, 15 Aug 2020

அபாயம் அதிகம் ஒரு நாளைக்கு 5000 PCR செய்யவேண்டும் - GMOA

10 July 2020 09:07 pm

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் பதிவாக தொடங்கியதுடன் இரண்டாம் கட்ட அலையின் அபாயம் தோன்றவுள்ளதால் சமுதாயத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 5000 பி.சி.ஆர் சோதனைகள் சீரற்ற முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

கொரோனாவின் இரண்டாவது அலையின் முதலாவது திரள் மாரவில பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட  பெண் வழியாக வந்ததா என்பது சந்தேகமே என GMOA இன் உதவி செயலாளர் டாக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

அதேபோல் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொடர்ச்சியாக கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் மேலும் அங்கு கொரோனா நோயாளர்கள் பதிவாக வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் சமூக சுழற்சி எங்கிருந்து தொடங்கியது என்பது பற்றியும், காந்தகாடு மையத்தில் இருந்து  வெளியேறியவர்களின்  எண்ணிக்கையும் இதுவரை தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் நிலைமை ஆபத்தானதாக அமையும் என டாக்டர் நவீன் டி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

KK