ஆபிரிக்க வலயத்தில் இருந்து வந்த இலங்கையர்களுக்கு மலேரியா
Tuesday, 11 Aug 2020

ஆபிரிக்க வலயத்தில் இருந்து வந்த இலங்கையர்களுக்கு மலேரியா

9 July 2020 11:18 am

ஆபிரிக்க வலயத்தில் இருந்து வந்த இலங்கையர்கள் 08 பேருக்கு மலேரியா நோய் இருப்பதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

இந்த மலேரியா நோயாளர்கள் பெல்வெஹெர தனிமைப்படுத்தல் நிலையத்திலே அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களுக்கு இடையில் 05 பேருக்கும்  நீர்கொழும்பு வைக்கால் பிரதேச தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 03 பேருக்கும் இவ்வாறு மலேரியா இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, மலேரியா அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைக்கு கூடுதலாக மலேரியா பரிசோதனையும் மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதேபோல் தனிமைப்படுத்தல் நிலையங்களை சுற்றி மலேரியா நுளம்புகளை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த வருடம் மட்டும் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த 53 பேருக்கு மலேரியா இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மலேரியாவை வெற்றிகரமாக ஒடுக்கிய நாடாக 2012 முதல் இலங்கையில் மலேரியா நோயாளர்கள் பதிவாகாத நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இடையில் மலேரியா நோய் இருப்பது காணக்கூடியதாக உள்ளது.

 

KK