மேலும் 04 பேருக்கு கொரோனா
Saturday, 15 Aug 2020

மேலும் 04 பேருக்கு கொரோனா

7 July 2020 11:38 pm

இன்றையதினம் மேலும் 04 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 2081ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை கைதியொருவரும், எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவரும் மற்றும் இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை வீரர் ஒருவரும் சவுதி அரேபியாவில் இருந்து வந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை இன்றைய தினம் மேலும் 38 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை  1955 ஆக உயர்வடைந்துள்ளது.

KK