முஸ்லிம் கடைகளை புறக்கணிக்கக் கோரும் ரத்தின தேரரின் கருத்தை ஏற்க முடியாது
Saturday, 15 Aug 2020

முஸ்லிம் கடைகளை புறக்கணிக்கக் கோரும் ரத்தின தேரரின் கருத்தை ஏற்க முடியாது

7 July 2020 11:07 pm

முஸ்லிம் மக்களில் சிறிய பிரிவினர் மேற்கொள்ளும் அடிப்படைவாத செயற்பாடுகள் காரணமாக அனைத்து முஸ்லிம்களையும் அடிப்படைவாதிகளாக கருதுவதும் முஸ்லிம் கடைகளை நிராகரிப்பதும் அனுமதிக்க முடியாத விடயம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. 

சிறிய பிரிவினர் செய்யும் தவறுக்காக முழு இனத்தையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது என அந்த கட்சியின் வேட்பாளர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் இனவாத போக்கில் செயற்படாதென ஊடக சந்திப்பில் உரையாற்றிய லக்ஷமன் யாப்பா தெரிவித்துள்ளார். 

அண்மையில் சம்பத் வங்கியில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து அனைத்து முஸ்லிம் கடைகளையும் நிராகரிக்க வேண்டும் என அத்துரலியே ரத்தின தேரர் கூறிய கருத்து தொடர்பில் தௌிவுபடுத்திய லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன, இவ்வாறு முஸ்லிம் கடைகளை புறக்கணித்தால் இல்லாத பிரச்சினைகள் ஏற்படும் எனவும் அந்த செயற்பாட்டிற்கு பொதுஜன பெரமுன ஒருபோதும் துணை நிற்காது எனவும் குறிப்பிட்டார். 

அதிக சிங்கள மக்களின் விருப்பத்திற்குரிய கட்சியாக பொதுஜன பெரமுன காணப்படுகின்ற போதும் சிறுபான்மை மக்கள் தொடர்பில் விஸ்வாசமின்றி செயற்படுவதில்லை எனவும் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 

vk