வெலிகட நோயாளர் IDHற்கு - கைதிகளை பார்வையிட தற்காலிக தடை
Wednesday, 12 Aug 2020

வெலிகட நோயாளர் IDHற்கு - கைதிகளை பார்வையிட தற்காலிக தடை

7 July 2020 09:14 pm

இன்று (07) காலை வெலிகட சிறைச்சாலையில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதுடன் குறித்த கைதி கந்தகாடுவில் அமைந்துள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் இருந்து ஜூன் மாதம் 27 ஆம் திகதியன்று வெலிக்கடை விளக்க மறியல் சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

குறித்த நோயாளர் தற்போது IDH வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கைதியுடன்  தொடர்புபட்டவர்களுக்கு  பிசிஆர் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன் இந்த பரிசேதனைகளுக்காக விளக்கமறியல் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மீள அறிவிக்கும் வரையில் வெலிகட சிறைச்சாலை சிறை கைதிகளை பார்வையிட வருவோருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

KK