அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் வெலிகட ஆபத்து உறுதி செய்யப்படும் - சுகாதார அமைச்சு
Saturday, 15 Aug 2020

அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் வெலிகட ஆபத்து உறுதி செய்யப்படும் - சுகாதார அமைச்சு

7 July 2020 08:14 pm

வெலிகட சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளரின் மூலம் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும்  பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (07) அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் கைதிகளுக்கு இடையில் வைரஸ் பரவல் இருந்தால் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும் எனவும் அவர்களுக்கிடையில் வைரஸ் பரவுவதற்கான அவதானம் பாரிய அளவில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், குறித்த கைதி எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது  என்பது குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கைதி அடையாளம் காணப்பட்டதுடன் அவருடன் நெருங்கிய தொடர்புடைய 400 முதல் 600 வரை பி.சி.ஆர் சோதனைகளை செய்ய வேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் விளைவாக இந்த நோயாளர் அடையாளம் காணப்பட்டதுடன் மேலும் பரிசோதனைகளை மேற்கொள்ள அமைச்சகம் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கமைய தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், நெரிசலான இடங்களில் முகமூடி அணிவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெலிகட சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர் கந்தகாடுவில் அமைந்துள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் இருந்து ஜூன் மாதம் 27 ஆம் திகதியன்று வெலிக்கடை விளக்க மறியல் சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

KK