இரகசிய பொலிஸாரால் தேடப்பட்ட பொலிஸ் பரிசோதகர் சரண்
Saturday, 15 Aug 2020

இரகசிய பொலிஸாரால் தேடப்பட்ட பொலிஸ் பரிசோதகர் சரண்

7 July 2020 07:54 pm

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பினை மேற்கொண்டதாக வெளியான பிறகு மறைந்திருந்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கடவத்த பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்காக பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியிருந்த நிலையில் இன்று காலை அவர் தொடர்பான தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருந்தது.

அதன் பின்னரே குறித்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

KK