SLCPIஇன் தலைவராக கஸ்தூரி செல்வராஜா மீண்டும் தெரிவு
Tuesday, 11 Aug 2020

SLCPIஇன் தலைவராக கஸ்தூரி செல்வராஜா மீண்டும் தெரிவு

7 July 2020 03:45 pm

அண்மையில் இடம்பெற்ற இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் (SLCPI) 59வது வருடாந்த கூட்டத்தில் திருமதி கஸ்தூரி செல்வராஜா 2020/21 ஆண்டுக்காக அதன் தலைவராக SLCPIஇனால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். Hemas Pharmaceuticalsஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் மற்றும் தற்போது ஹேமாஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமாக கடமையாற்றும் திருமதி செல்வராஜா அம்மையார், இரண்டாவது தடவையாகவும் புதிய பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் சம்மேளனத்தின் தலைவராகவும் கடமையாற்றவுள்ளதுடன் அரச மற்றும் தனியார் பிரிவுகளின் பங்குதாரர்களுடன் இணைந்து நாட்டின் சுகாதார சேவைகள் நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி கொண்டுசெல்லவுள்ளார்.
 
சுகாதார பாதுகாப்பு ஒருவரது சந்ததி ரீதியான அம்சங்களுக்கு பொதுவானது போல ஒவ்வொருவருக்கு தனிப்பட்ட விதத்தில் தேவையான மருந்துகள் மற்றும் வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்கையில் பொறுப்பான மற்றும் உயர்தர மருந்துகளை விநியோகிக்கையில் மருந்து துறைக்கு முக்கியமான பொறுப்பொன்று வழங்கப்பட்டுள்ளதாக திருமதி செல்வராஜா தெரிவித்துள்ளார்.
 
தம்மால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள துறையில் ஈடுபடுவது தமது பிரதானமானது என அவரது உரையின் போது செல்வராஜா அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 'நாம் அனைவரும் இலங்கையர்கள். ஆம், நாம் வர்த்தகங்களை மேற்கொள்கிறோம், எனினும் எமது நோக்கமாக இருக்க வேண்டியது நோயாளர்களின் ஆரோக்கியமாகும்.' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மருந்துகளுக்கான நியாயமான விலை பொறிமுறையொன்று உள்ளிட்ட தேசிய தேவைகள் குறித்து அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க SLCPI காட்டும் அக்கறை குறித்து தாம் விரிவாக விளக்கமளித்துள்ளார். அதனூடாக உயர்தரத்தில் பரந்த அளவிலான மருந்துகளை பாவனையாளர்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.
 
'நியாயமான விலை பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைவதற்கு நாம் தயார்' என மேலும் அவர் தெரிவித்துள்ளார். விலை நிர்ணயம் தொடர்பிலான ஒழுங்குமுறைகள், ரூபாயின் பெறுமதி, பண வீக்க விகிதம் ஒட்டுமொத்தமாக அதிகரித்தல் மற்றும் விலை பொறிமுறையொன்று இல்லாமை போன்றவை துறைக்கு பாரிய சவாலாக உள்ளது. எரிபொருள் போன்ற இறக்குமதியை சார்ந்த அத்தியாவசிய சேவைகளைப் போலல்லாமல், மருந்து தயாரிப்புக்கள் விலை பொறிமுறையொன்றுக்கு கட்டுப்பட்டில்லை.
 
கடந்த பல மாதகாலமாக எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னணியிலுள்ள குழுவாக, அனைத்து தொழிலாளர்கள், விநியோகஸ்த வலைப்பின்னல் பங்குதாரர்கள் மற்றும் தொழில் துறையிலுள்ள அனைத்து உறுப்பினர்களினதும் தனித்துவமான நடவடிக்கைகள் மற்றும் அதற்காக அவர்கள் தயாராவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கும் செல்வராஜா அம்மையார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 
 
'கொவிட்-19 தொற்றுநோய் எமது துறைக்கு எதிர்பாராத சவால்களை எடுத்து வந்தது. எமது பல வர்த்தகங்கள் பல இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் நோயாளர்கள் மற்றும் நாடு ஆகியனவே எமது முன்னுரிமையாக கருதுவதற்கு துறை கவனித்துக் கொண்டது. மருந்து தட்டுப்பாடு ஏற்படவில்லையெனவும், அவ்வாறான சூழல் ஏற்படவில்லையெனவும் நாட்டிற்கும் மற்றும் சுகாதார அமைச்சிற்கும் உறுதியளிக்க எமக்கு முடிந்தது.' என அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் ஏற்பட்ட தொற்றுநோய் நிலைமை காரணமாக சிறந்த பாடமாக, நாட்டில் தொற்றாத நோய்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் அதனுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதனுடன் அவர்களுக்கான அன்றாட மருந்து வகைகளை வழங்குவதற்கு சார்ந்திருக்க வேண்டியுள்ளதா என ஆராய்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 'இலங்கையில் NCDsஐ தடுக்கவும் மற்றும் சுகப்படுத்தவும் நாம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். அதற்காக நாம் செய்ய வேண்டியது உயர் தரத்திலான மருந்துகளை வழங்குவதாகும். என்றபோதிலும், இலங்கையில் சுகாதார சேவைகள் கட்டமைப்பின் பிரதான பிரிவாக, எமது மக்கள் மத்தியில் சிறந்த சுகாதார பழக்கங்கள் மற்றும் அதன் பெறுமதிகளை மேம்படுத்த நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.' என அவர் சுட்டிக்காட்டினார்.
 
துறைக்காக 2020/21 ஆண்டின் அவரது கண்ணோட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்:
தமது ஆணைகளையும் நெறிமுறைகளையும் நோக்கிய பயணத்தை நோக்கி தொடருதல்
நியாயமான விலை பொறிமுறையை உருவாக்குவதற்காக உரிய தரப்பினருடன் தொடர்பு கொள்ளல்
துறைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளின் பயன்பாடுகளை உறுதிப்படுத்துதல் மற்றும் அதன் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளித்தல்
SLCPIஇன் 2020/21 ஆண்டுகளுக்காக அதிகாரிகள் சபையாக, சிரேஷ்ட உப தலைவர் - சஞ்ஜீவ விஜேசேகர, நிறைவேற்று பணிப்பாளர் - ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் (தனியார்) நிறுவனம், பிரதித் தலைவர் - அஸாம் ஜாவட், முகாமைத்துவப் பணிப்பாளர், சிப்லா ஃபார்மா லங்கா நிறுவனம், தலைவர் - ரோல்ஃப் பிளேஸர் - பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளர், ஏ. பவர் நிறுவனம், பொருளாளர் - சிறிமல் பெர்னாந்து, பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர், அஸரன் லிமிட்டெட்.
 
SLCPI தற்போது தனியார் மருத்துவ துறையில், உற்பத்தியாளர், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் 80%இற்கும் மேற்பட்ட பங்களிப்பை வழங்கும் உறுப்பினர்கள் 60க்கும் அதிகமான உறுப்பினர்களின் பிரதிநிதிகளாக சேவை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
KK