திருமணத்தில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு !
Saturday, 15 Aug 2020

திருமணத்தில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு !

7 July 2020 11:54 am

நிகழ்வுகளுக்காக மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதமானோர் அல்லது ஆகக்கூடிய வகையில் 300 பேருக்கு ( மணமகன் உள்ளிட்ட குழு, மணமகள் உள்ளிட்ட குழு , இசைக்குழு மற்றும் ஏனைய கலைஞர்கள் அடங்கலாக) குறைந்த எண்ணிக்கையில் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு 2020 ஜுலை 6ம் திகதி தொடக்கம் அனுமதி வழங்கப்படுகின்றது. 

இதே போன்று திருமண வைபவத்தில் கலந்து கொள்வவோருக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

வைபவ மண்டபங்களில் கலந்துகொள்வதற்காக இதற்கு முன்னர் வழங்கிய ஆலோசனைகள் இதற்கும் ஏற்புடையதாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

KK