பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் கொரோனா
Tuesday, 11 Aug 2020

பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் கொரோனா

4 July 2020 03:23 pm

பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்குக் கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க பிரதிநிதி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட தூதர்களுடன் இடம்பெற்ற பல சந்திப்புகளுக்குப் பிறகு இந்த கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குரேஷி, ''எனக்குக் கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்லாவின் கருணையால் உற்சாகமாகவும் வலிமையுடனும் இருக்கிறேன். வீட்டில் இருந்து என்னுடைய பணிகளைத் தொடர்வேன். உங்களின் பிரார்த்தனைகளை எதிர்பார்க்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் பாகிஸ்தானின் வெளிநாட்டு அமைச்சர் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துள்ளதுடன் கடந்த புதன்கிழமை அமைச்சரவை சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

KK