இலங்கை கோள் மண்டல காட்சிகள் மீள ஆரம்பம்
Tuesday, 11 Aug 2020

இலங்கை கோள் மண்டல காட்சிகள் மீள ஆரம்பம்

4 July 2020 12:36 pm

கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டல காட்சிகள் எதிர்வரும்  7 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுகாதார பிரிவு மற்றும் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக மீள ஆரம்பிப்பதற்குறிய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை முன்னெடுப்பதற்காக அனைத்து காட்சிகளும் வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களை மாத்திரம் பங்குகொள்ளச்செய்து காட்சிகள் நடைபெறும் என்று உயர் கல்வி, தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் பணிப்பாளர் (இலங்கை கோள் மண்டலம்) கே .அருணு பிரபா பெரேராவினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

KK