2011ம் ஆண்டு போட்டி காட்டிக் கொடுப்பு இடம்பெற்றமைக்கு சாட்சி இல்லை ICC
Tuesday, 11 Aug 2020

2011ம் ஆண்டு போட்டி காட்டிக் கொடுப்பு இடம்பெற்றமைக்கு சாட்சி இல்லை ICC

4 July 2020 07:01 am

2011ம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் போட்டி காட்டிக்கொடுப்பு இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க எவ்வித சாட்சியும் இல்லை என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அதனால் இவ்விடயம் குறித்து விசாரணை நடத்த முடியாது என சர்வதேச கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அலெக்ஸ் மாசர் தெரிவித்துள்ளார். 

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி தொடர்பில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் அதில் போட்டிக் காட்டிக்கொடுப்பு இடம்பெற வாய்ப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே  போட்டிக் காட்டிக்கொடுப்பு  தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவிற்கு முறைப்பாடு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கின்ற போதும் அப்படி ஒரு கடிதம் வரவில்லை என ஒருவர் தெரிவித்தார்.

இந்த போட்டியில் காட்டிக் கொடுப்பு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டால் விசாரணை நடத்தத் தயார் என மார்சல் தெரிவித்துள்ளார். 

போட்டிக் காட்டிக் கொடுப்பு இடம்பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் அது பாரிய பிரச்சினை  எனவும் முறைப்பாடு கிடைத்தால் விசாரணை நடத்தத் தயார் எனவும் மாஷல் தெரிவித்துள்ளார். 

குறித்த போட்டியில் அல்லது வேறு எந்தப் போட்டியிலும் போட்டிக் காட்டிக் கொடுப்போ அல்லது மோசடியோ இடம்பெற்றால் விசாரணை நடத்த சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவு தயார் என அவர் குறிப்பிட்டார். 

vk