ரணிலின் வீடு தேடிச் சென்ற குற்ற விசாரணை பிரிவு
Saturday, 15 Aug 2020

ரணிலின் வீடு தேடிச் சென்ற குற்ற விசாரணை பிரிவு

3 July 2020 11:22 pm

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறவென குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.  

பிணை முறி மோசடி தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுமாரு குற்ற விசாரணை பிரிவிற்கு கடந்த 18ம் திகதி சட்டமா அதிபர் பணித்துள்ளார். 

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு மேலதிகமாக பிரதமரின் ஆலோசகர் எஸ்.பாஸ்கரலிங்கம் மற்றும் மத்திய வங்கியின் பிரதானி ஒருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

VK